Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

தலையங்கம்

ஒவ்வொருவரது நியாயத்தையும் திருடும் பொய்யர்களை, திருடர்களை சட்டமும், சமூகமும் வக்கீல் என்கிறது. இந்த தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெறுபவர்களை நீதிபதிகள் என்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், இவர்கள் நியாயத்தை திருடும் கொள்ளையர்கள், கொள்ளைக்கூட்டத்தின் தளபதிகள் என்பதுதான் எனது ஆராய்ச்சி முடிவு.
ஆனால், இவை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் அவ்வப்போது தெரிய வருகிறது. இந்த வகையில், இன்று இந்தச் செய்தி வெளி வந்துள்ளது.
இது நீதித்துறை குறித்து, (ந்)நீதித்துறையே கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் என்பதால், யாரும் மறுக்கமுடியாது. ஆகையால், நிதிபதிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, நீங்கள் ஒருபோதும் மறக்கவும் கூடாது.
இதனையெல்லாம் நீதியைத்தேடிசாட்சியங்களை சேகரிப்பது எப்படி? என்கிற நூலில், ‘‘நீதிபதிகள் கொள்ளைக் கூட்டத்தின் தளபதிகள்’’ பகிரங்கமாகவே எழுதி அவர்களுக்கும் படிக்க கொடுத்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. உண்மையைத் தானே எழுதியிருக்கேன்னு, நிதிபதிகள் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க!
இதுல, இன்னொரு கொடுமை என்னான்னா, அறக்கட்டளையின் தலைவர் பதவியில் இருந்து பதவி காலத்திற்கு முன்பே என்னை விலக்கியதால், தனக்கு இருபது லட்சம் நட்டம் என்பதோடு, அறக்கட்டளை நிர்வாகிகளோ முப்பது லட்சம் கேட்டு தன்னை மிரட்டினார்கள் என்கிறார், வழக்கு போட்டவர்.
அறக்கட்டளைகளில் அறஞ்சார்ந்த செயல்கள் எதுவும் நடப்பதில்லை. தொண்டு என்கிற பெயரில் ஃபண்டை சுருட்டும் பணிதான் நடக்கிறது என்கிற எனது ஆய்வு முடிவும் அப்படியே அரங்கேற்றப்பட்டுள்ளன.
Pribe judge arrest
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட சிவில் நீதிமன்ற நீதிபதி சரவணப்பா சஜ்ஜன், வழக்கொன்றில் ஒரு வருக்கு சாதகமாக நடந்துகொள் வதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட் டுள்ளார்.
இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் பி..பாட்டில் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாண் சிவில் நீதிமன்றத்தில் சரவணப்பா சஜ்ஜன் மூத்த நீதிபதியாக பொறுப்பு வகிக்கிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட வரிடம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார்.
லஞ்சம்பெறும்போது கர்நாடக உயர் நீதிமன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தனது குற்றத்தை நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் காவல்துறையிடம் ஒப்படைக் கப்பட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4 மணிக்கு லஞ்சம்
நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் மீது லஞ்ச புகார் அளித்த காசிநாத் என்பவர் கூறியதாவது:
பீதர் மாவட்டம் ஹூல்சூரில் உள்ள குருபசவேஷ்வரா கல்வி அறக்கட்டளைக்கு 1995-ம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டேன். எனது பதவி காலம் முடிவதற்குள் பசவேஷ்வரா மடத்தை சேர்ந்தவர்கள் என்னை அப்பதவியில் இருந்து வெளியேற்றினர். இதனால் எனக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் எனது பதவி காலம் முடிவதற்குள் வெளியேற்றியதால் ஏற்பட்ட ரூ. 20 லட்சம் நஷ்டத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு பசவேஷ்வரா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் என் னிடம் ரூ.30 லட்ச ரூபாயை வட்டியுடன் செலுத்துமாறு மிரட்டினர். இது தொடர்பாக கடந்த 2000-வது ஆண்டில் வழக்கு தொடர்ந்தேன்.
கடந்த 14 ஆண்டுகளாக தீர்ப்பு வெளியாகவில்லை. விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் தருமாறு நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து கர்நாடக உயர்நீதி மன்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தேன்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி சரவணப்பா சஜ்ஜன் கூறியவாறு கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணியளவில் பீதர் பசவண்ணா சிலைக்கு அருகே சென்றேன். அங்கு காத்திருந்த நீதிபதி சரவணப்பா என்னிடம் ரூ. 5 லட்சம் லஞ்சமாக பெற்றார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவரை சம்பவ இடத்திலே கைது செய்தனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இரவு 12 மணி
இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை.
மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக இத்தனை வருடங்கள் நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது, என்று மத்திய அரசு அறிவித்து விட்டது.
தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!
வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல, போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது.
Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை, இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது. உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன, இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால் எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!
மக்கள் எல்லோரும் super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை பதுக்கிக்கொண்டார்கள், வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை தேடி ஓட ஆரம்பித்தார்கள் IT company கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், எல்லாம் மூடப்பட்டுவிட்டன.
கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது, எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும் மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது, நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது, நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!
வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி பருப்பு வாங்க நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,
உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது, வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது,
ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின, Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள்,
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய உலக வெப்பமயமாதல் குறைந்து பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!
பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும், tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும் உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது, பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,
பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது, எல்லாம் இருந்தும் எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த மக்களை மகிழ்விப்பதற்காக ரஜினி, கமல், அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள்.
திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி! காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!
அதனால், தயவு செய்து கரகாட்டத்தையும் குறட்டையையும் நிறுத்திவிட்டு கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!
ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை, சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை!
இந்த கனவும் அப்படித்தான் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான் காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது, கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!
பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய 
பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது.
குறிப்பு: பொதுநலன் கருதி தலையங்கமாக வெளியிடப்படும் இந்த ஆக்கமானது, வெகுசில நாட்களாக சமூக வலைப்பக்கங்களில் உலா வருவதாகும்.


காந்தி தாத்தா போட்டோ போட்டு அச்சடிச்சி உட்டாங்க
அழகழகா பொம்ம போட்டு ஜோடிச்சித்தான் வச்சாங்க
விதம் விதமா நம்பரெல்லாம் வக்கணையா போட்டாங்க
மொத்தத்துல சைபர் என்னும் நெஜத்த மறச்சி புட்டாங்க
கட்டு கட்டா காகிதத்த அச்சடிச்சி வீசுறான்
வயிறு காய உழைக்கிறவன் அதுக்கு மதிப்பு கொடுக்கிறான்
அச்சடிச்சவன் ஆளறான். உழைக்கிறவன் வாடுறான்
குரங்கு கையில் அப்பம் தந்த பூனைப் போல ஏங்குறான்
நீயும் நானும் அச்சடிச்சா கள்ளபணம்
ரிசர்வ் பேங்கும், அரசும் சேர்ந்தடிச்சா நல்ல பணம்
பித்தலாட்டம் மர்மமான கலர் காதிதம்
உலகத்த தன் பிடியில் வச்ச வெத்து காகிதம்
இது புரியாமல் பணமிருந்தால் பத்தும் செய்யலாம், லட்சமிருந்தால் எந்த லட்சியமும் இல்லாமல் வாழலாமென என்கிற எண்ணத்தில், வாழ்க்கையை அலட்சியம் செய்து விதிமீறல்களை தெரிந்தே செய்கிறார்கள். இதனால், நம் வாழ்க்கை எவ்விதத்திலம் பாதிக்கப்படாது எனவும் நம்புகிறார்கள்.
அடுத்தடுத்து என்ன செய்யலாமெனவும் திட்டந்தீட்டுகிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களது வாரிசுகளுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக அத்திருட்டு திட்டத்தில் தங்களது வாரிசுகளையுஞ் சேர்த்துக்கொள்கிறார்கள்.
உன்னுடைய திருட்டில் என்னை சேர்க்காதே என எந்த வாரிசும் சொல்வதில்லை. மாறாக, தந்தையே சேர்க்காவிட்டால் கூட, தகராறு செய்யும் வாரிசுகளாகவும், தேவைப்பட்டால் தீர்த்துக்கட்டவும் தயங்குவதில்லை. இவர்களுக்கு தெரியாது சொத்துக்காக கொலை செய்தால், வாரிசு உரிமையை இழந்து விடுவோம் என்பதோடு, சட்டப்படி சொத்தும் கிடைக்காது என்பது!
கோடிகோடிக்கு அதிபதியாக இருந்தவர், நொடிப்பொழுதில் பிச்சைகாரன் ஆனார் என்பதோடு, விதிமீறல்களில் ஈடுபட்ட கேடியாகவும் ஆக்கப்பட்டு விட்டார், சென்னை மௌலிவாக்கத்தில் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளரும், அவரது வாரிசும்.
இவர்கள் அடுத்து எங்கு வலைத்துப்போடலாம் என்பது உட்பட எத்தனையெத்தனை திட்டங்களைத்தீட்டி, எத்தனையெத்தனை வண்ணக் கனவுகளோடு இருந்திருப்பார்கள்? எல்லாம் ஒருநொடிப்பொழுதில் நாசமாகி விட்டது. இந்த நாசத்தில் இருந்து இரண்டு மூன்று தலைமுறைகள் மீறுவதே (கு, )ஷ்டமப்பா!
இதற்காகவே இந்நேரம் பல பிணந்தின்னிப் பொய்யர்கள் உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றுகிறேன் என அவர்களை நோக்கி படையெடுத்திருப்பார்கள்; இந்த வழக்கு நம்மிடம் விசாரணைக்கு வராதா என நிதிபதிகள் கணக்குப்போட்டு காத்துக்கொண்டிருப்பார்கள்!!
என்ன விதிமீறல் இருந்தால் நமக்கென்ன? நமக்கு இடம் கிடைத்தால் போதுமென அவ்வடுக்குமாடி குடியிருப்பில் இடம் வாங்கியவர்கள், கட்டடத்தை கட்ட ஒப்புக்கொண்டவர்கள் என எத்தனையெத்தனை பேர் பெரும் இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்?
இவர்களில் யாராவது ரமணா திரைப்படத்தை பார்க்காமலா இருந்திருப்பார்களா என்றால், வெளிமாநிலத்தில் இருந்து கூலிவேலைக்கு வந்தவர்களைத்தவிர, மற்றவர்கள் எல்லாம் நிச்சயமாக பார்த்திருப்பார்கள். அப்படியிருந்தும் எப்படி துணிந்தார்கள்?
இதையெல்லாம் தட்டிக்கேட்க நிஜத்தில் ரமணா வரமாட்டாரென சந்தடிச்சாக்கில் நக்கலடிக்கிறார்கள். சிலர், இவ்விடம் குறித்த பதிவுத்துறை வரைபடத்தை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து தங்களுக்கு தெரிந்ததைச் சொல்கிறார்கள்.
ஆவணப்பதிவேடுகளாக இருப்பதையே தங்களுக்கு பாதிப்பென வரும்போது திருத்தும் அயோக்கியர்களான அரசூழியர்களுக்கு, இணைய வலைப்பக்கத்தில் இருப்பதை மாற்ற எத்தனை நிமிடங்கள் ஆகும்? கட்டிடம் இடிந்தது என தெரியவந்த அடுத்த நொடியே நிச்சயம் இதைத்தாம் செய்திருப்பார்கள்.
இவ்வளவு ஏன், பிரபல தனியார் தொழிற்நிறுவனமான டி.வி.எஸ் கூட, இதைத்தாம் செய்தது என்பதை பதிவு செய்துள்ள கட்டுரை விபரங்களை இங்கு சொடுக்கிப் படித்தறியலாம்.
நாங்களெல்லாம் மீட்பு பணியில் ஈடுபட்டோமெனவும், எங்களுக்கு சிலர் உணவுப்பொருட்களை வழங்கியதாகவும் பதிவு செய்கிறார்கள். இவர்கள் உண்மையில், மனிதாபிமானம் என்கிற வகையில், மெய்மறந்து இதுபோன்ற மீட்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதனை தார்மீக கடமையென்று கருதுகிறார்கள். கடமையை மடமையாகவும், மடமையை கடமையாகவும் செய்பவர்களே ஏராளம். இதில், அரசின் பங்கு அதிகம்.
இது பொய்யர்கள் செய்யும் தொழில்போல!
ஆம், விதிமீறல் செய்யாதோர், இதுபோன்ற விதிமீறல்களில் சிக்கமாட்டார்கள் என்பதை கருத்தில்கொண்டு, ஒரேயொருமுறை மீட்புப்பணிகளில் ஈடுபடாமல் விட்டால் மட்டுமே, வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடுவோரையும், இதற்கு துணைபோவோரையும் கொஞ்சமாவது யோசிக்கச் செய்யமுடியும்.
இல்லாவிட்டால், இதற்கு முன்பாக இதுபோன்று எத்தனையோ இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்திருந்துங்கூட, இது நடந்திருக்குமா அல்லது இனியாவது நடக்காமல்தாம் இருக்குமா?
இதுபற்றி மேலோட்டமாக மேயாமல், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் சட்டப்படி தண்டனை விதிக்கப்படுவதன் நீதிமுறை அடிப்படை நோக்கமுங்கூட, இதுதாம் என்பது புரியும்!
ஆனால், இந்நீதிமுறையுங்கூட, பணத்தால் விதிமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு நெடுங்காலமாகி விட்டதன் விளைவே, இதுபோன்ற சர்வ சாதாரணமான ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அடிப்படை காரணமாகிவிட்டது.
எனவே, முதலில் நீதிமுறையை ஒழுங்குபடுத்தால், எந்த விதிமீறலையுமம் தடுக்கமுடியாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டிய தருனமிது. செயல்பட வேண்டியது தர்மம்.
idஇந்த வகையில், நியாயந்தான் சட்டம் என்பதை அடிப்படை தத்துவமாக எடுத்துக்கொண்டு, எனது சட்ட ஆலோசனைகளை ஆரம்பத்திலிருந்தே ஒழுங்குபடுத்த ஆரம்பித்ததன் விளைவே, எடுத்துக்கொண்ட கொள்கையில் கொஞ்சஞ்கொஞ்சமாக முன்னேற முடிந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, உங்க கருத்தென்ன என்பதை இதுவரை பதிவு செய்யவில்லையே என சில அன்பர்கள் வம்படியாக கேட்கிறார்கள்இப்படி உண்மையை எழுதி பலபேர்கிட்ட நான் திட்டுவாங்க வேண்டுமென்பதே, எனது கருத்தின்மீது அளவுகடந்த அன்புகொண்ட வம்பர்களது ஆக்கப்பூர்வமான ஆர்வமாக இருக்கிறது.
ஆமாம்ரமணா படத்தில் வருவதுபோன்று எல்லோரும் குடியேறிய பிறகு இச்சம்பவம் நடந்திருந்தால், விதிமீறலில் துணிந்து ஈடுபடுவோருக்கும், அதற்கு துணைநிற்போருக்கும் நல்லதொரு பாடமாக இருந்திருக்கும்
ஆனால் பாவம், இதையெல்லாம் அறியாத எங்கிருந்தோ வந்த பற்பல அப்பாவி தொழிலாளர்கள் வாழ்வை இழந்து விட்டனர்நாமும் விசாரணையில் சிக்குவோமென, இத்தொழிலாளர்களை அழைத்து வந்தவர்கள் கூட, மக்கி மண்ணாகி விடட்டும் என்று, அன்று எத்தனைபேர் வேலை செய்தார்கள் என சொல்லமாட்டார்கள்அடையாளங்காட்ட பயந்து அநாதையாக விட்டு விடுவார்களே?!
(, )றுதியாக, இப்படியொரு தலையங்கமெழுதும்  இவன் எவ்வளவு கேவலமானவனா, வக்கிரபுத்தியுடையவனா இருப்பான் என இப்போது நீங்கள் நினைத்தால், அடுத்து இதுபோன்றதொரு சம்பவம் நடக்கும்போது, இதிலுள்ள உண்மையை உணர்வீர்கள்.
இவர் மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில், ஆதரவற்று தெருவில் கிடக்கும் நபர்களுக்கு உணவு வழங்கி வந்தவர். உணவு வழங்குவது ஒகே. ஆனால், அதற்கு முன்பாக அவர்களின் காலை தொட்டு கும்பிடுவது உள்ளிட்ட அனைத்து பில்டப்பும் தேவையற்றது என நம்பினேன்.
அதெல்லாம் எதற்காக (உன்னை கொல்லப்போகும் பாவத்திற்காக என்னை மன்னித்துவிடு) என்பது இப்போது புரிந்துவிட்டது.
சாலையோரங்களில் வசித்தபோது கூட இறக்காத அளவிற்கு, ஆசிரமத்தில் ஒரு மாதத்திற்கு இவ்வளவுபேர் இறந்தால், அது எப்படி ஆதரவற்றோருக்கு உணவளிப்பதும், இறப்பதும் ஆகும். அப்பெண் சொல்வதுபோல, கொலைதானே என்கிற சந்தேகம் எழாமலில்லை.
இப்படி துணிந்து குற்றம் புரிபவர்களுக்கு பின்னால், யாரோவொரு உயர்மட்ட அரசூழியர் இருப்பார் என்பது மட்டும் உறுதி! 2010 ஆம் ஆண்டில்இவரை சி.என்.என் நிறுவனம் கதாநாயகனக தேர்ந்தெடுத்தது. இவர் விக்கிபீடியாவில் வேறு இடம் பிடித்துவிட்டார்.
நக்கீரனலிருந்து ……
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல், பிறந்த மேனியோடு, கதறியபடி ஓடி வந்த அந்த இளம்பெண்ணை முதலில் பார்த்தவர்கள் நூறு நாள் வேலை செய்யும் பெண்கள்தான்.
அக்ஷயா ஆசிரமத்தின் காம்பவுண்டின் சுவரை எகிறிக்குதித்து ஓடி வந்ததை அவர்கள் பார்த்தார்கள்.. ‘‘நான் மெண்டல் இல்லை. மத்த பொண்ணுங்களை கொலை செஞ்ச மாதிரி என்னையும் சாகடிக்கிறதுக்கு டைம் பிக்ஸ் பண்ணிட்டாங்க. ப்ளீஸ் அக்கா..அம்மா.. என்னைக் காப்பாத்தி ஒங்க வீட்டுக்கு கூட்டிப் போங்க.”
இந்தாம்மா.. முதல்ல இதை உடம்புல சுத்திக்கதங்கள் தலையில் சுற்றியிருந்த சாயத் துண்டுகளை அந்த இளம் பெண்ணுக்கு கொடுத்து நிர்வாணத்தை மறைக்க வைத்தார் கள், அன்றைய வேலை முடிந்து வீடுகளுக்கு கிளம்பத் தயாராக இருந்த அந்த 100 நாள் வேலைப் பெண்கள்.
மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், சோழவந்தான் அருகில், நாகமலை புல்லூத்து என்ற இடத்தில், ஆடம்பரமாக காட்சியளிக்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத்தி லிருந்து கூப்பிடு தூரத்தில், 5.6.14 வியாழன் மாலை 4 மணிக்கு நடந்தது இந்தச் சம்பவம். அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்த பெண்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள கொடிமங்கலம் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
அக்ஷயாவில் இருந்து ஊர் தப்பிவந்த ஆயிஷா என்ற அந்த இளம்பெண்ணை தங்களோடு அழைத்துச் சென்று, சேலை ரவிக்கை அணியவைத்து, சாப்பாடு கொடுத்து, கிராம நல அலுவலர் உதவியோடு, காவல்துறையினரிடம் ஒப்படைத்தவர்கள் கொடிமங்கலம் மக்கள்தான். கொடிமங்கலம் மக்களின் பாதுகாப்பில் இருந்த அந்தச் சிறுபொழுதில் ஆயிஷாவைச் சந்தித்தோம். எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் தெளிந்த நீரோட்டம் போல பேசினார்.
அக்ஷயா ஆசிரமத்தில் நடக்கிறது சேவையோ தொண்டோ கிடையாது. அவங்க, அநாதைகளின், மன நிலை சரியற்றவர்களின் உடல் உறுப்புகளை வியாபாரம் செய்றாங்க. அங்கே இருக்கிற என்னை மாதிரி இளவயசுக் காரங்களை சுயமா யோசிக்க விடமாட்டாங்க. தினமும் மூணு தடவை போதை ஊசி போட்டு மிதக்க விடுறாங்க. அசிங்கமா பேசுறதா நெனைக்காதீங்க. இப்ப ஏழெட்டு நாளா எனக்கு உமட்டுது. வாமிட் வர்ற மாதிரி இருக்கு. கர்ப்பமா இருக்கிறேனோ அப்படின்னு எனக்கே சந்தேகமா இருக்கு.
ஆசிரமத்தில் பாதி சாமத்தில பெண்கள் அலறுவாங்க. பயமாயிருக்கும். எழுந்து ஜன்னல் வழியா பார்ப்பேன்அடுத்த அறையில வீடியோ கேமராவால் ஆபாச படம் எடுக்கிறது தெரியும். இல்லைனா நிர்வாணமா ஆடச் சொல்லி படம் எடுப்பாங்க. டிரஸ்ஸை கழட்ட மறுக்கிற பெண்களை ரெண்டு மூணு தடியனுங்க அடிப்பானுங்க. அந்தப் பொண்ணுங்க அடிதாங்க முடியாம கதறுங்க. இதெல்லாம் மிட் நைட்லதான் நடக்கும்
அப்புறம், வாரம் ஒருமுறையாவது யாராவது ரெண்டு ஃபாரீன்காரங்களை ரமேஷ்ன்ற தடியன் கூட்டிட்டு வருவான். அந்த வெளிநாட்டுக்காரங்க முன்னாடி எங்களை வரிசையா நிக்கவச்சு பார்ப்பாங்க. எங்கள்ல இருந்து ரெண்டு மூணு பேரை அவங்க காட்டிட்டு போவாங்க. அடுத்த ரெண்டுநாள்ல, அவங்க காட்ன ரெண்டு மூணுபேரும் பிணமாயிடு வாங்க. சாகிறவங்க எல்லாரும் நைட்லதான் சாவாங்க. அது சாவு இல்லை, கொலை. மயக்க மருந்து கூட கொடுக்காம உறுப்புகளை அறுத்தெடுக்கிற கொலை. ராத்திரி யோட ராத்திரியா புதைச்சிடுவாங்க. இல்லைனா எரிச்சிடுவாங்க.
4- ஆம் தேதி புதன்கிழமை பகல்ல ஒரு வெள்ளைக்காரனை கூட்டிட்டு வந்தான் ரமேஷ். அந்த வெள்ளையன் என்னை அடையாளம் காட்டிட்டுப் போனான். அப்பவே எனக்கு பயம் வந்திருச்சு. என்கூட இருந்த பொண்ணுங்க… “ஆயிஷா உனக்கு அஞ்சாம் நைட் ஆபரேஷனாம்னு சொல்லிக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. அதான்அதாண்ணே அஞ்சாம் தேதி சாயந்தரமேகுளிக்கிறதாச் சொல்லிட்டு, யூனிபார்மை கழட்டிப் போட்டுட்டு, ஓடி வந்து இவங்க கிட்ட அடைக்கலம் புகுந்தேன்!” குளமான கண்களைத் துடைத்தபடி சொல்லி முடித்தார் ஆயிஷா.
ஆயிஷா சொல்வது எந்த அளவுக்கு உண்மை? கொடிமங்கலம் ராஜாமணியிடம் கேட்டோம்.
நிச்சயமாக சொல்றேன். அக்ஷயா ஆசிரமத்தில் ரொம்ப தப்பு நடக்குது. மதுரை பெரியாஸ்பத்திரியில் கூட இவ்வளவு பேர் சாகிறதில்லை. மாதத்துக்கு கொறஞ்சது இருபது இருபத்தஞ்சு பிணங்களை நாகமலை சுடுகாட்ல எரிக்கிறாங்க. அல்லது புதைக்கிறாங்க. எஸ்.எஸ்.காலனியில சாதாரணமா இருந்த ஒரு ஆளு… 2 கோடிக்கு நிலம் வாங்கி கோடிக்கணக்கில் செலவழிச்சு கட்டடங் களை கட்டி, வர்றவன் போறவனுக்கெல்லாம் ஆயிரம் பத்தாயிரம் லட்சம்னு வாரிக் குடுக்கிறதா சொல்றாங்க. நிச்சயமா அங்கே பெரிய கிரைம் நடக்குது!” வியப்பின்றிச் சொன்னார் ராஜாமணி.
ஆயிஷாவுக்கு சேலை ரவிக்கை கொடுத்த லீலாவதியிடம் கேட்டோம். “பாவம்ங்க இந்த ஆயிஷாஅது கத்திக்கினு ஓடியாரதைப் பார்த்தப்போ எங்க ஈரக்கொலையே ஆடிப்போச்சு. பாதிச் சாமத்தில அந்த ஆசிரமத்தில பொண் ணுக அலறுற சத்தம் நல்லா கேக்கும். ஆனால் நாம யாரும் அதுக்குள்ள போகவே முடி யாது. இப்பக் கூட பாருங்க. போலீஸ் ஆபீசர்களைக் கூட உள்ளே விடமாட்டேன்றாங்க. அந்த ஆசிரமக்காரங்களைப் பார்த்து போலீசே பயப்படுதே!” என்றார் லீலாவதி.
மாதம் இருபது முப்பது பிணங்கள் எரிக்கப்படுவது உண்மையா?
பொறுப்பு வி...வாக இருக்கும் திரவியத்திடம் கேட்டோம்.
பழைய வி...வும், உதவியாளரும் கூட இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க. கடந்த 6 மாதத்திற்குள் 50-க்கும் அதிகமான சாவுகள் என்று சொன்னார்கள். ரொம்ப டவுட்டாதான் இருக்கு. போலீஸ்தான் விசாரித்து நடவடிக்கை எடுக்கணும். பணத்தால் எதையும் சரிக்கட்டிவிட முடியும்னு அந்த நிர்வாகம் எண்ணிக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்என்றார் அவர்.
அக்கம் பக்கக் கிராமங்களின் மக்களும், ஆயிஷாவும் சொல்லும் ஏராளமான குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டு நிற்கும் அக்ஷயா தொண்டு நிறுவனத் துக்குச் சென்றோம்.
டி.எஸ்.பி. சாந்த சொரூபனையே உள்ளே அனுமதிக்க முடியாதென்று வெளியே நிறுத்தி வைத்திருந்தார்கள். கிராம மக்களின் ஆவேசத்தை தாங்க முடியாமல் தான் கடைசியில் மெயின் அலுவலகம் வரை போகலாம் எனத் திறந்து விட்டார்கள்.
அக்ஷயா ஓனர் திருமதி வித்யா கிருஷ்ணய்யரை சந்தித்தோம்.
அநாதைகளை, மனநலமற்றவர்களை பாதுகாக்கும் தொண்டு நிறுவனம் இது. இந்த ஆயிஷாவும் கொடிமங்கலம் மக்களும் எங்க மீது ஏன் இப்படி அபாண்டமா சொல்றாங்களோ தெரியலை. அனாதைப் பிணங் களை வி...விடமும் தலையாரியிடமும் சொல் லிட்டுதான் அடக்கம் செய்றோம். மற்றபடி கிட்னியெல்லாம் திருடமாட்டோம்ங்க!” சற்றே எரிச்சலோடு சொன்னார்.
அதன்பிறகு, அந்த அக்ஷயாவுக் குள் விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. சாந்த சொரூபன், உசிலம்பட்டி டி.எஸ்.பி. சுரேஷ், ஆர்.டி.. ஆறுமுக நைனார், சப்-கலெக்டர் ஆர்த்தி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, வட்டாட்சியர் முத்துராமலிங்கம் என அதிகாரிகள் பலர் சென்று வந்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் வாய்திறக்க மறுத்தார்கள்.
ஆர்.டிஓ. ஆறுமுக நைனார் மட்டும் நம்மிடம், “துறை ரீதியான விசாரணை தொடருது. போஸ்ட்மார்ட் டம் செய்யாமல், போலீசுக்கு தெரி விக்காமல் 15 சடலங்களை எரித்ததை ஒப்புக்கொண்டார்கள். மற்றபடி போலீஸ்தான் விசாரிக்க வேண்டும்!” என்றார்.
அக்ஷயா தொண்டு நிறுவனத் திற்குள் போலீசார் போவார்களா? “இன்னமும் எஃப்..ஆர். போடலீங்க. கேட்டம்னாஅந்தப் பைத்தியக்காரி சொல்றதை எப்படி நம்புறதுனு கேக்குறாக. யாரோ ஒரு .பி.எஸ். அதிகாரியோட சப்போர்ட் அக்ஷயா கிருஷ்ணய்யருக்கு இருக்கு. அது யாருனு தெரியலையே!” என்கிறார்கள் கவலையோடு கொடிமங்கலம் மக்கள்.


0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...