நீதியைத்தேடி… நூல்களைப் படிங்க! என்கிற கட்டுரையின் தொடர்ச்சி இதுவென்பதால், இதனைப் படித்து (ஏற்கெனவே படித்திருந்தாலும் திரும்பப்படித்து நினைவூட்டிக் கொண்ட) பின்னரே தொடருங்கள்.
இவ்வழக்கில் இதுவரை மூன்று நிதிபதிகள் மாறி விட்டார்கள். நீங்க வாரணட் பாலா வாசகரா என கேட்டது முதல் நிதிபதி…
இரண்டாவது நிதிபதி இரண்டாவது வாய்தாவுக்கே, மாற்றல் வாங்கிக்கொண்டு ஓடி விட்டாராம்.
இப்ப வந்திருக்கிறவர் மூன்றாவது நிதிபதி.
இவர்கிட்ட முதல் வாய்தா 01-12-2014 அன்று வந்திருக்கு.
சரவணன் கொடுத்த மனுவையெல்லாம் வழக்கு கோப்பில் இருந்து எடுத்துப் படிச்சவரு, பொய்யர்களைப் பார்த்து நாமெல்லாம் தமிழ்லதான் பேசுறோம். பின்ன மனுவை மட்டும் எதற்கு ஆங்கிலத்தில் தாக்கல் செய்யுறீங்க… தமிழிலியே தாக்கல் செய்ய வேண்டியதுதானே என கேட்டிருக்கார்.
ஆனால், மூத்தப் பொய்யர்கள் மூன்றுபேர், அதெல்லாம் நடைமுறைச் சாத்தியமில்லை என்று சொல்ல, சட்டப்படி இந்நீதிமன்றத்தின் மொழியே தமிழ்தான் என்னும்போது, எப்படி சாத்தியமில்லாமல் போகும் என கேட்டு, விசாரணையை முடித்திருக்கிறார்.
அடுத்த நாளே, இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்குரை உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் தாக்கல் செய்ய வேண்டுமென்கிற அறிவிப்பை நீதிமன்ற வளாகம் முழுவதிலும், தன் கைப்பட கையெழுத்திட்டு ஒட்டியிருக்கிறார்.
இது, நீதியைத்தேடி… வாசகர் சரவணனால், ஒட்டுமொத்தப் பொய்யர்களுக்கும் விழுந்த மரண அடியாகும். இப்படி ஒரு வாசகரே எல்லோருக்குமான தாய்மொழி உரிமையை பெற்றுத்தர முடிகிறதென்றால், ஒவ்வொரு வாசகரும் நினைத்தால் சமுதாயத்திற்கு எவ்வளவோ செய்ய முடியும்!
போகப்போக நிதிபதிகளை, அமலில் இருக்கும் சட்டத்தை கடைப்பிடிக்க வைப்பதே, சாதனையாகி விடும் போலிருக்கிறது.
0 Add your Comments/Feedback:
Post a Comment