Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Apr 21, 2015

மனு வரையுங்கலை!

பதினைந்தாயிரம்
முப்பதாயிரம்
நாற்பதாயிரம்
முப்பதாயிரம்
அறுபதாயிரம்
இருபத்தஞ்சாயிரம் (இது, அவர்களே அழைத்துக் கொடுத்தது)
எழுபதாயிரம்
ஆமாம், இது மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவி எழுபதாயிரத்தோடு, இவ்வருடத்தில் வெளிவர உள்ள ஏழாவது பொதுவுடைமை நூலாகும்.
கடந்த 09-10-2014 அன்று தலைநகர் தில்லியிலுள்ள மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திற்கு நேரில் சென்று, ஆறாவது நூலாக வெளிவந்துள்ள ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூல் அதுவரை வெளிவராமல் இருப்பதற்கு போதிய நிதியின்மைதான் காரணம் என்றும், எனவே இனி வரும் காலங்களில் கூடுதல் நிதியை ஒதுக்கவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தேன்.
ஆனால், எனது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டவர்கள், மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, மிகக்குறைந்த நிதியை மட்டுமே ஒதுக்கும் நிலை உள்ளதாக தெரிவித்துவிட்டு, உங்களின் முயற்சிக்கு எங்களால் இயன்ற நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் எனவும் உறுதியளித்திருந்தனர்.

அதன்படியே, ஒதுக்கப்பட்ட குறைந்த நிதியில், அதிகபட்ச நிதியாக ரூபாய் எழுபதாயிரத்தை ‘மனு வரையுங்கலை!’நூலுக்காக நமக்கு ஒதுக்கியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களான உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் நம்பிக்கையோடு வாக்குறுதி கொடுத்ததற்கும், அதனை நிறைவேற்றியதற்கும் அடிப்படைக் காரணம், ‘‘அந்நூலுக்கு அதுவரையினான வாசகர்களின் நிதிப்பங்களிப்பு பட்டியலை காண்பித்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நூலை வெளியிட்டு, அதன் பிரதிகளை அனுப்பி வைப்பதாக, நானும் உறுதிகூறி, அதன்படியே அனுப்பி வைத்ததேயாகும்’’.
ஆகையால், இதன் பெருமையனைத்தும், தேவையான நிதியுதவியை அளித்த உங்களையேச் சேரும்! இந்நூலுக்கு 19-01-2015 அன்று தினமணி நாளிதழ் வழங்கியுள்ள மதிப்புரையை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
பொதுவாக தங்களின் வாழ்வாதாரம் என்னவென்பது தெரியாமலேயே, ஒவ்வொரு நூலுக்கும் உங்களின் பங்களிப்பை கோருகின்றோம். அதன்படியே, இம்மனு வரையுங்கலை நூலுக்கும் உங்களின் பங்களிப்பைக் கோருகிறோம். இவ்விடத்தில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம், நமக்கு கொடுக்கும் நிதி எவ்வளவோ, அதற்கு எவ்வளவு நூலை வெளியிட முடியுமோ, அதனை வெளியிட்டாலே போதும். ஆனால், அந்நூல்கள் நாம் கொடுக்க விரும்பும் அனைத்து இடங்களுக்கும் போதுமானதாக இருக்காது என்பதை தாங்களும் நன்கு அறிவீர்கள்.
உங்களின் பங்களிப்பின் மூலமே, இந்நூல் வழக்கம்போலவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள அனைத்துப் பொது நூலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று சேரும் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
நமது சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகம் எப்படி தன் பங்களிப்பைக் கடமையாக கொடுக்கிறதோ, அப்படியே நாமும் நம் பங்களிப்பைச் செய்வது நமது கடமையாகும்.  
எனவே, பங்களிப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதுபற்றிய விருப்பத்தை தெரிவிக்கலாம். நிதிப்பங்களிப்பைச் செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 2015 க்குள் (இந்நூலை செப்டம்பர் 2015க்குள் வெளியிட வேண்டிய கட்டாயம் இருப்பதால்)
Account Name :  CARE Society
Account Number :  768307417
Account Type :  Saving Bank Account
IFSC code   :  IDIB000H011
Bank Name   :  Indian Bank, Hosur – 635109
என்கிற வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, உங்களின் பங்களிப்பை கணக்கில் வரவு வைக்க ஏதுவாக பணஞ்செலுத்திய விபரத்தை திரு. அய்யப்பன் 9842909190, 9150109189, திரு. நடராஜ் 9842399880, திரு. சரவணன் 9789488105 ஆகிய ஏதோவொரு உலாப்பேசி எண்களில் ஏதாவது ஒன்றிலும்
மற்றும்
caresociety.org@gmail.com & warrantbalaw@gmail.com  என்கிற மின்னஞ்சல் முகவரிகளில், மின்னஞ்சல் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் அஞ்சலட்டை மூலம்  தகவலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலுக்கு பங்களிப்புத் தொகை தருவதாக உறுதியளித்ததன் பேரில், அந்நூலின் பட்டியலில் இடம்பெற்று, இதுவரையிலும் அப்பங்களிப்புத் தொகையைச் செலுத்தாதவர்கள் உடனே செலுத்திவிட்டு தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பங்களிப்புப் பட்டியலில் எப்படியும் தம் பெயர் இடம் பெற்றுவிட வேண்டும் என்கிற ஆசையில், வாக்குறுதி அளித்தபடி பங்களிப்புத் தொகையைத் தராமல் இனியும் ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்நூலில், அனைத்து வகையான பிரச்சினைகளையும், எளிதில் எதிர்கொள்களும் விதமாக பொய்யர்களைப் போல் அல்லாமல், தத்தமது தொணியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த சட்டப்பூர்வ அறிவிப்பு, பதில் அறிவிப்பு, பிரமாணப்பத்திரம், இடைமனுக்கள், அசல் அல்லது பிணை அல்லது சீராய்வு அல்லது மேல்முறையீட்டு மனு தயார் செய்தல், கேவியட், தடையுத்தரவு, நீதிப்பேராணை (ரிட்) ஆகியவை குறித்து விரிவாக விளக்கியும், இதுவரை நான் தயார் செய்த அனைத்து மனுக்களையும் தொகுத்தளிக்க உள்ளேன்.
இதில், நீதியைத்தேடி… மற்றும் கடமையைச் செய்! பலன் கிடைக்கும் ஆகிய நூல்களில் இல்லாத, உங்களுக்குத் தேவையான அடிப்படை சட்டங்குறித்த சந்தேகங்களைச் சொன்னால், அதையுஞ்சேர்த்து எழுத வசதியாய் இருக்கும்.

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...