Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Apr 18, 2015

மனுவும், மற்றவைகளும்…

அரசூழியர்கள் மட்டுமன்று; எல்லோருமே சட்டப்படிதாம் செயல்பட முடியும். ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கடமை. நமக்கோ ஊதியமில்லா கடமை. அவ்வளவே!
ஆகையால்தாம், அரசூழியர்களிடம் நாம் எதையும் வாயால் சொல்லும்போது, மனுவாக எழுதி கொடுங்கள் என கேட்கிறார்கள். இதேபோல அவர்களும் எதுவொன்றையும் வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. எழுத்து மூலமாகத்தான் தந்தாக வேண்டும்.
இதுதாம், நியாயந்தான் சட்டம் என்கிற தத்துவத்தின் அடிப்படை சாரம்சம். இத்தத்துவத்தை புரிந்துகொண்டால், எல்லாமே எளிதில் விளக்கும். இல்லாவிடில், எதுவுமே விளங்காது என்பதோடு, எல்லாமே சோரந்தான் போகும்.
இதற்கென்று வெகுசில சட்ட விதிகளும் இருக்கின்றன. ஆனால், எல்லா சூழ்நிலைக்கும் ஏற்றவாறு பொதுவானதொரு சட்டப்பிரிவாக இந்திய சாட்சிய சட்ட உறுபு 101 மற்றும் 106 ஐ எடுத்துக் கொள்ளலாம்.
யார் எதைச் சொல்கிறார்களோ அல்லது யார் எதனை மறுக்கிறார்களோ அதனை அவர்களே மெய்ப்பிக்கவும் அல்லது பொய்யப்பிக்கவும் கடமைப்பட்டவர்கள் என்பது, முறையே இவ்வுறுபுகளின் ரத்தினச் சுருக்கமான உட்கருப்பொருள்.
இப்படி எந்தவொரு மனுவாக இருந்தாலும், அக்கோரிக்கைக்கு பொருத்தமான அல்லது பொதுவானதொரு சட்டப்பிரிவை போட்டுவிடுவது நல்லது. ஒருமனுவில் பல கோரிக்கைகள் இருந்தால், ஒவ்வொன்றுக்குமே சட்டப்பிரிவை குறிப்பிடுவது சாலச்சிறந்தது.
இதனால், நன்மை என்று சொல்லப்போனால், நீங்கள் சட்ட விழிப்பறிவுணர்வோடு கேட்கிறீர்கள். ஆகையால், நாம் கடமையைச் செய்தாகவேண்டும் என்கிற கட்டுப்பாடு ஊழியர்களுக்கு ஏற்படும்.
தீமை என்று சொல்லப்போனால், நீங்கள் குறிப்பிடும் அச்சட்டப்பிரிவு குறித்து ஊழியர்களும் தெளிவாக அறிந்திருக்கவேண்டும். இதற்கு பெரும்பாழும் வாய்ப்பில்லை என்பதால், நீங்கள் பாடம் நடத்தவேண்டியிருக்கும்.
நான் இப்படி பல ஊழியர்களுக்கும், ஏன் நிதிபதிகளுக்குமே பாடம் நடத்தியுள்ளேன் என்பதை நீதியைத்தேடி… நூல்களைப்படித்தால் நன்கு விளங்கும் என்பதோடு, இந்நூல்களை அவர்களுக்கும் கொடுத்துள்ளோம் என்பதும் விளங்கும்.
எல்லா அரசூழியர்களுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டங்குறித்து ஓரளவேனும் தெரியும். ஆனால், சாட்சிய சட்டங்குறித்து நிதிபதிகளுக்கே தெரியாதபோது, ஊழியர்களுக்கு எப்படி தெரியும். ஆகையால், தகவல் பெரும் உரிமைச்சட்டப்படி விண்ணப்பிக்கவில்லை என்றோ அல்லது அதன் கீழான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லையென்றோ திருப்பி அனுப்புவார்கள்.
உரிமை என்பது தானாகவே தரப்படவேண்டிய ஒன்று. அப்படி தரப்படாதபோது, அவற்றை உரிமையுடன் கோரவேண்டுமே தவிர, மனுவில் தாழ்மையுடன் அல்லது கெஞ்சி கேட்டுகொள்கிறேன் என பிச்சை கேட்பதுபோல கேட்கவேண்டிய அவசியமில்லை. இதுகுறித்துநீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் விரிவாகச் சொல்லியுள்ளேன்.
இப்படி கொடுக்கப்படும் மனுவை, பின்வரும் இரண்டு காரணங்களுக்காகத்தாம் திருப்பிக் கொடுக்க முடியும்.
அ) அம்மனுமீது அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியாத பட்சத்தில், அம்மனுவை யாரிடம் கொடுக்கவேண்டுமென எழுத்து மூலமாகவே குறிப்பிட்டுதாம் திருப்பி கொடுக்க வேண்டும்.
ஆ) அம்மனுவில் குறைபாடு எதுவும் இருந்தால் அதனை குறிப்பிட்டு கொடுத்தால், அதனை சரிசெய்து மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டும்.
இதனை ஆங்கிலத்தில் ரிட்டன் என்டாஸ்மென்ட் என்பார்கள். அதாவது, திருப்பி கொடுப்பதற்கான காரண குறிப்பு என தமிழில் பொருள்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாழும் இப்படி எழுதி திருப்பிக் கொடுப்பதில்லை.
ஆமாம், யாது காரணத்துக்காகவும் அரசூழியர்கள் சட்டத்திற்கு உட்படாத வகையில் நடக்க நினைக்கும்போது இப்படி காரணத்தை எழுதி திருப்பி கொடுக்கமாட்டார்கள். இதனை விழிப்பறிவுணர்வில்லாமல் வாங்கிக்கொண்டுபோய் ‘அங்கே கொடுத்தால், இங்கே கொடுங்கள்; இங்கே கொடுத்தால் அங்கே கொடுங்கள்’ என பந்தாடி அலைக்கழிப்பார்கள்.
இதற்கு நிதிபதிகளும் விதிவிலக்கன்று. அப்படியே எழுதிக்கொடுத்தாலுங்கூட, நிதிபதிகளே நேரடியாக எழுதமாட்டார்கள். மாறாக, நிதிபதிகளின் எடுபிடிகளான நீதிமன்ற மா(மா)க்களே எழுதுவார்கள். இறுதியாக, இம்மா(மா)க்களையெல்லாம் மேய்க்கும் தலைமை மா(மா)க்களான நிதிபதிகளே ஒப்பமிட்டிருப்பார்கள்.
பெரும்பாழான நிதிபதிகளைப் பொருத்தவரை, ‘திருப்பப்படுகிறது’ என தலைப்பிட்டு ‘இம்மனு எப்படிச் செல்லும்?’ என்று ஒருகேள்வியை எழுப்பியே திருப்பி கொடுப்பார்கள்.
இப்படியெழுதிக் கொடுத்தால், அவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவே கிடையாதென்றும், ஆகையால் உங்களிடமிருந்து சட்ட விழிப்பறிவுணர்வைப்பெற விரும்புகிறார்கள் என்றும், நீங்களாகவே புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகையால், அதன் கீழேயே ‘சமர்ப்பிக்கப்படுகிறது’ என தலைப்பிட்டு இம்மனு எப்படிச் செல்லாது என சட்டவிதிகளோடு குறிப்பிட்டு, நிதிபதிகளான தாங்கள் குறிப்பெழுதிக் கொடுத்தால், எப்படிச் செல்லுமென்பதற்கான சட்டவிதிகளை விளக்கமாக குறிப்பிட்டு சமர்ப்பிக்கிறேன் என எழுதிக்கொடுத்தால் போதும். இவர்களிடம் இனி நாம் பூச்சாண்டி காட்டமுடியாதென நினைத்து உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள்.
பொய்யர்கள் யாரும் இப்படி எழுதிக்கொடுத்து நான் பார்த்ததில்லை. வேறாக, அவர்களுக்கேயுள்ள அபிலாஷையில் சரி, சரி… உனக்கென்ன பங்கு தரனுமோ, அதனை தந்துடுறேன். ஒழுங்கு மரியாதையா விசாரணைக்கு எடுத்துக்கோ என்கிற வகையில், நிதிபதிகளிடம் நேரடியாகவே பவ்வியமாக பம்முவார்கள்.
நிதிபதிகள் சட்ட விழிப்பறிவுணர்வில் டம்மி என்பது மட்டுந்தான் நமக்குத்தெரியும்.
ஆனால், வேறெதிலெல்லாம் வீக்கு என்பது பொய்யர்களுக்கு டீட்டெயிலாகவே தெரியும். உடனே, நிதிபதிகளும் எல்லாம் புரிந்து விட்டதுபோல மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்கள். உண்மையும் அதுதானே!
இந்தியா குடியரசாகி அறுபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்தாம், மனுவும் மற்றவைகளும் குறித்து தெரிந்து கொள்ள நேரிடுகிறது என்பது, சட்ட விழிப்பறிவுணர்வில் எவ்வளவு தூரம் முன்னேறாமல் இருக்கிறோம் என்பது விளங்கும்.
மனு எழுதுவதும் ஒரு கலைதாம். இதனை எழுதயெழுதவே மற்றவர்களை தன்வசப்படுத்து மளவிற்கு வார்த்தைகள் நம் வசப்படும்.
நான் கொடுத்த மனுக்களை படித்து, திறந்த நீதிமன்றத்தில் நிதிபதிகள் நேரடியாகவே பாராட்டியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் எழுதலாம் என்பது அவர்களுக்கு தெரியாததால் தானே இப்படி…  இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
பொய்யர்கள் மனுமேல் மனுபோடும்படி, பிரச்சனையை பெரிதுபடுத்தி விடுவார்கள். ஆனால், நானோ ஒரே மனுவில் எல்லா பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமளவிற்கு செய்து விடுவேன் என்பதால், நீதியைத்தேடி… வாசகர்கள் பலரும் நானே மனு எழுதிக்கொடுக்க வேண்டுமென விரும்புவார்கள். எத்தனை பேருக்கு நானே எழுதிக்கொடுப்பது?
ஆகையால், நீங்கள் எழுதி அனுப்புங்கள் சரிசெய்து அனுப்புகிறேன் என சொல்லிவிடுவேன். அவர்களை உயரிய அக்கரையோடு எழுதியிருந்தால், அதனை ஒழுங்குபடுத்தி தருவேன்.
நான்தான் ஒழுங்குப்படுத்தி தரப்போகிறேனே என்கிற எண்ணத்தில் பொறுப்பற்ற முறையிலோ அல்லது சரியான புரிதல் இல்லாமலோ ஏனோதானோவென்று எழுதி அனுப்பினால் என்னிடம் கதையாகாது. ஏனெனில், நான் எழுதிக்கொடுத்தாலும் ஆகாது. பின்ன எதற்கு வெட்டியாக எழுதுவானேன்.
சட்டப்படி மனுவை எப்படியெழுத வேண்டும் என்பதற்காகவே, மனு வரையுங்கலை என்கிற நூலை எழுத திட்டமிட்டுள்ளேன்.

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...