1. சட்டக் கல்வியை பயிற்றுவித்தல்
நம் நாட்டில் யார் பெரிய ஆள் என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் போதும். உங்களின் மன நிலைக்கு தக்கவாறு, ரவுடி, பொறுக்கி, போலீஸ், விஏஓ, தாசில்தார், கலெக்டர், ஆளுநர், அரசியல்வாதி, வக்கீல், நீதிபதி, குடியரசுத் தலைவர் என பலரையும் சொல்வீர்கள்.
ஆனால், இவர்களில் யாருக்கு யார் கட்டுப்படுகிறார்களோ இல்லியோ; அனைவரும் ஒன்றுக்கு கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும்தான்.
ஆம்! நாம் கருவாக உருவாவது முதல் கல்லறைக்கு செல்லும் வரை, நம்மை நல்வழியில் நடக்க வைத்து பாதுகாக்கிறது. கல்லறைக்குச் சென்றப் பின்னும் கூட, நமது சொத்துக்களை வாரிசுரிமைச் சட்டப்படி வாரிசுகளுக்கு வழங்கிப் பாதுகாக்கிறது. இதன் ஊடே, நமது வாழ்க்கையில் எதைச் செய்வதானாலும், அவைகளுக்கு உரிய சட்டத்தை பயன்படுத்தியே, உரிமையைப் பெற வேண்டியிருக்கிறது.
இப்படி, நமது நல்வாழ்வும், வாழ்க்கையும் சட்டத்தால் பின்னி பிணைக்கப்பட்டிருக்கும் போது, அதற்குறிய சட்டக்கல்வியை பயிற்றுவிக்காமல், ஆங்கிலேய அடிமை அரசைப் போல, உலகின் மிகப் பெரிய குடியரசான நமது இந்திய அரசும், அடிப்படைக் கல்வியில், சட்டக் கல்வியை ஆரம்பத்திலிருந்தே கொண்டு வராதது, அரசின் துரதிருஷ்டவசமான செயல் என்றுதாம் சொல்ல வேண்டும்.
மக்களாகிய நாம்தான் அரசாங்கத்தையே உருவாக்குகின்றோம் என்கிற நிலையில், நமது நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யாத போது, அதற்கு மேலும் அரசாங்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது மக்களின் கடமையல்ல. மாறாக, மாக்களின் கடைமையே!
ஒரு நற்செயல் மிக்க கடமையை, இன்னார்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியாய உணர்வின்பால் ஈர்க்கப்பட்டதாலேயே, இச்சட்டக் கல்வியை பயிற்றுவிக்கும் பொறுப்பை, இந்திய சாசனக் கோட்பாடு 51அ-இன் கீழ், கடமையாக நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
2. சட்ட வழியில் நடத்தல்
நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமே, சட்டத்தைக் கையாளும் நமது ஊழியர்கள் ஆன, அரசாங்கத்தில் அல்லது அரசாங்கத்தின் அதிகாரத்தில் அல்லது நமது நல விருப்பத்திற்கு கூலிக்கு அல்லது மதிப்பு ஊதியத்திற்கு வேலை பார்ப்பவர்கள் எல்லாம், சட்டத்தை அதன் நோக்கத்திற்கு மாறாக, தன் நோக்கத்திற்காக தவறாக கையாள்வதே என்றால், உங்களுக்கு சற்று சந்தேகமாக கூட இருக்கலாம்.
ஆனால், இதுதான் உண்மை என்பதை நீங்கள் எப்போது அடிப்படையான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறுகிறீர்களோ அப்போதே உணர முடியும் என்பதால், இதனை ஊட்டி உணர வைப்பதும், தவறாது உங்களை சட்ட வழியில் நடக்க வைப்பதுமே எங்களின் தலையாய கடமை.
3. பிரச்சினைகளை தவிர்த்தல்
நீங்கள் சட்ட வழி தவறாது நடப்பதன் மூலம், உங்களை பிரச்சினைகள் எவ்விதத்திலும் நெறுங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள முடியும். அப்படியே எவராவது, பிரச்சினை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு நடந்து கொண்டால், அவர்களுக்கும் சரியானதொரு சட்ட வழியை, நாங்கள் உங்களுக்கு எடுத்துச் சொல்வது போலவே, நீங்களே எடுத்துச் சொல்லி, அவர்களையும் அதன் வழி நடக்க வைக்க முடியும்.
ஒருவேளை அவர்கள், உங்களின் நியாயமான சட்ட வழி காட்டுதலை ஏற்காத போது, அதனால் உண்டாகும் பிரச்சினைகள் உங்களை நெருங்காமல், உங்களது சட்ட விழிப்பறிவுணர்வு மூலம் நொறுக்கித்தானே ஆக வேண்டும். அதற்காக, நீங்களே வாதாட வேண்டும்.
4. சுய வழக்காடுதல்
வாதாடுவதற்கென்றே வக்கீல்கள் இருக்கும் போது, உங்களையே ஏன் வாதாட சொல்கிறோம்?
உங்களுக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால், யாரால் வரும்? நிச்சயமாக உங்களை விட அதிகாரம், பலம், பணம், விழிப்பறிவுணர்வு என ஏதாவதொரு விதத்தில் உயர் நிலையில் உள்ளவர்களால்தான் வருமேயன்றி, கீழ் நிலையில் உள்ளோர்களால் வருவது அரிதிலும் அரிதே.
இந்நிலையில், வழக்குக்குச் செல்வதன் அல்லது அதனை எதிர்கொள்வதன் முக்கிய நோக்கமே, தனது வாழ்வாதார உரிமையை அல்லது பொருளாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வது அல்லது சட்டத்துக்கு புறம்பாக நம்மை சீண்டியோரை சட்டப்படியான தண்டனைக்கு உள்ளாக்குவது அல்லது நாம் செய்யாத குற்றச்சாற்றுக்கான தண்டனையில் இருந்து தற்காத்துக் கொள்வதேயாகும் என்கிற நிலையில், நீங்களே வாதாடுவதால் உங்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன? வக்கீல்களை வைத்து வாதாடுவதால் உங்களுக்கு வரும் தீமைகள் என்னென்ன என்பதை தெ(ரி)(ளி)ந்து கொள்ளுங்கள்.
நீங்கள்
|
வக்கீல்
|
1. உங்க பிரச்சினையை உங்களைத் தவிர வேறு யாராலும் மிகச்சரியாக சொல்ல முடியாது. | ஆனால், உங்களின் எப்படிப்பட்ட வக்கீலும் கூட, உங்களைக் கேட்டுக் கேட்டுத்தான் சொல்ல முடியும். |
2. சட்ட விழிப்பறிவுணர்வோடு நியாயத்திற்காக வாதாடும் உங்களை, எதிர்தரப்பினர் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கவோ, அதிகார பலத்தை அல்லது ஆள் பலத்தைக் கொண்டு மிரட்ட யோசிப்பார்கள். செய்தாலும் அதையும் சந்திக்கத் துணிவீர்கள். | ஆனால், அரைகுறை சட்ட அறிவோடு, பணத்துக்காகவே வாதாடும் உங்க வக்கீலை உங்களின் எதிர்மனுதாரர்கள் மிக எளிதாக விலைக்கு வாங்க, மிரட்ட முடியும். எச்சரிக்கை! |
3. உங்களது வழக்கு தொடர்பான மிக முக்கிய ஆதார ஆவணங்களை, உங்களிடமிருந்து எதிர்த்தரப்பினர் அவ்வளவு எளிதில் கைப்பற்றி அழித்து விட முடியாது. | ஆனால், உங்களது எதிர்தரப்பினர், உங்களது வக்கீலிடமிருந்து, உங்களது வழக்கு தொடர்பான மிக முக்கிய ஆதார ஆவணங்களை கைப்பற்றி, அழித்து, உங்களுக்கு மிக எளிதாக அநீதியை இழைக்க முடியும். எச்சரிக்கை! |
4. உங்க வழக்குக்கு நீங்களே முதலாளி என்பதால், மிகுந்த பொறுப்புணர்வோடும், கடமை உணர்வோடும், மிகுந்த எச்சரிக்கையோடும் வழக்கை நடத்துவீர்கள். | ஆனால், வக்கீல் வாதாடுவது கூலிக்கு மாரடிக்கும் பொய் மற்றும் இடைத்தரகு என்பதால் உங்களின் அளவிற்கு பொறுப்புணர்வு இருக்காது. எச்சரிக்கை! |
5. உங்க வழக்குக்கு நீங்களே முதலாளி என்பதால், நீங்களே வாதாடுவதை நீதிபதி உட்பட யாராலும் சட்டப்படி தடுக்க முடியாது என்பதோடு, உங்களின் நியாய உணர்வை புரிந்து கொண்டு, நீதிபதி கூட தவறு செய்யப் பயப்படுவார். | ஆனால், வக்கீல்கள் உங்களின் கூலிக்கான வேலைக்காரர்களே! மேலும், ஒவ்வொரு வழக்கிலும் வக்கீல்களின் வக்காலத்தை ஏற்று, அவ்வழக்கில் வாதாட அனுமதிப்பது நீதிபதியின் சட்டப்படியான அதிகாரம் என்பதால், நீதிபதியின் தவறை வக்கீல்களால் தட்டிக் கேட்க முடியாது. |
6. ஒருவேளை தப்பித்தவறி, அப்படியே நீதிபதி தவறு செய்தாலும், அவரையும் கூட சட்டப்படியே கேள்விகளை எழுப்ப தேவையான பற்பல மனுக்களை, பற்பல கோணங்களில் தாக்கல் செய்து, உங்களது நியாயத்தை தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, எனது நூல்களில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளதால், மிக மிக எளிதாக நியாயத்தைப் பெறலாம். | ஆனால், வக்கீல்களோ, (அ)நீதி(பதி)யைத் தட்டிக் கேட்டால், அடுத்தடுத்த வழக்குகளில் வாதாட அனுமதிக்க மாட்டார் என்று பயந்தும், தங்களின் தொழிலில் தொடர்ந்து, பணம் கொழிக்க வேண்டும் என்பதற்காகவே, பல்வ |
0 Add your Comments/Feedback:
Post a Comment