இன்றைய நமது நி(நீ)திமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நகைச்சுவை உணர்வோடு எட்டு நிமிட இக்குறும்படம் சொல்கிறது.
உண்மையில், இதை விட மோசமான நிலைதான் இன்றைய இந்திய நீதித்துறையில் நிலவுகிறது என்பது, நீதிமன்றத்தை அனுதினமும் அணுகும் வழக்காளிகளுக்குத்தான் தெரியும்.
இக்குறும்படத்தில் பல்வேறு வகையான உண்மைகள் பொதிந்துள்ளன. அதாவது, உண்மையில் நீதிமன்றத்தில் எப்படி சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை நடைபெறுகிறது என்பது குறித்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பல முறை இதனை திரும்பத் திரும்ப பார்ப்பதன் மூலம் நீங்கள் பல்வேறு விதமான புரிதல்களை உணரலாம்.
நன்றி விஜய் தொலைக்காட்சி
0 Add your Comments/Feedback:
Post a Comment