இந்திய குடிமக்களாகிய நாம், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்றதும், நாமே, நம்மை ஆட்சி செய்து கொள்வதற்காக வரையறை செய்து கொண்ட உறுதிமொழி ஆவணமே, இந்திய அரசமைப்பு ஆகும்.
இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே முதன்மையானதும் ஆகும்.
அதாவது, ஒவ்வொரு இந்திய குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரையிலான குடிமக்கள் அனைவரும் இதற்கு கட்டுப்பட்டவர்களே! உட்பட்டவர்களே!!இதுவே, நமது இந்திய தாய்த்திருநாட்டையும், நம்மையும் நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது ஆகும். இதில் சொல்லப்பட்ட வழி முறைகளின்படிதான் குடிமகன் முதல் குடியரசு தலைவர் வரை தத்தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதால் இதுவே முதன்மையானதும் ஆகும்.
இதனை, இந்திய அரசியல் சாசனம் அல்லது இந்திய அரசியல் சட்டம் என பலரும் தத்தம் மனம் போன போக்கில் தவறாகவே, சொல்லுகின்றனர், எழுதுகின்றனர். இது முற்றிலும் தவறு.
ஏனெனில்,
மாறாக, இந்திய அரசாங்கத்தை, இந்திய அரசாங்கத்தை நிறுவுவதற்கும், நல்வழிப்படுத்து வதற்கும், தலைமை தாங்குவதற்கும் அத்தியாவசிய தேவையான தேர்தல் ஆணையம், நீதித்துறை, குடியரசு தலைவர் போன்ற அதிகார அமைப்புகளை நிறுவுவது மற்றும் இந்திய அரசுக்கு உட்பட்ட மாநில அரசுகளை நிறுவுவது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறை ஆவணமாகும்.
இந்திய குடிமக்களாகிய நாம், நமது, மதம் பிடித்த மதக்கொள்கைகளை, சதி செய்யும் சாதி ச(த)ரித்திரங்களை வெறுத்து வேரறுப்போம்.
இந்திய அரசமைப்பின் நற்கொள்கை மிக்க கோட்பாடுகளை தெரிந்து, அதன்வழி நடந்து சிறந்த குடிமகனாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம்.
1 Add your Comments/Feedback:
I'm malaw. After i read this article, i understood our Indian Constitution. Thanks to Brother Warrant Balaw.
Post a Comment