இப்பதினெட்டு நிமிட குறும்படமானது தேர்தல் குறித்த விழிப்பறிவுணர்வை கேள்வி பதில் முறையில் ஊட்டக்கூடியது ஆகும்.
இதில் ஒரு குடிமகனுக்கு எந்த சட்டத்தின்படி, எந்த வயதில் வாக்குரிமை வருகிறது.
உண்மையான மக்களாட்சி நடக்க தேர்தல் முடிவு எப்படி இருக்க வேண்டும்?
அக்காலத்தில் வாக்குரிமைக்கு முன்பாக இருந்து வந்த குடவோலை முறை தேர்தல் பற்றிய விபரம்...
ஒவ்வொருவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
எந்த வேட்பாளரையும் பிடிக்காத போது என்ன செய்வது? போன்ற விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.